மருத்துவ துறையில் அரசு வேலை ! செப்டம்பர் 13 கடைசி தேதி: மிஸ் பண்ணிடாதீங்க!

3 months ago 4
ARTICLE AD

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப, மாவட்ட நலவாழ்வு சங்கம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த அறிவிப்பின் (எண்: 2988/NHM/18/2025) கீழ் மொத்தம் 9 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்:

மருத்துவ ஆலோசகர்: 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 40,000). கல்வி தகுதி: BYNS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆண் சிகிச்சை உதவியாளர்: 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபிஸ்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பெண் சிகிச்சை உதவியாளர்: 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபிஸ்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மருந்து வழங்குபவர்: 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் டிப்ளமோ பார்மசி (ஆயுஷ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர்: 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 10,000). கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், ஆனால் தமிழில் தெளிவாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பல்நோக்குப் பணியாளர்: 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 10,000). கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், கடலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cuddalore.nic.in இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 13, 2025 ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Read Entire Article