மரக்காணத்தில் பரபரப்பு... திருமனத்திற்க்கு மீறிய உறவு ; கள்ளக்காதலனை கொலை செய்த கணவன்

3 months ago 5
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபரை கூலிப்படையை வைத்து வெட்டி கொலை செய்த கணவர். ஐந்துபேரை பேர் கைது செய்து மரக்காணம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள முருங்கைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஹமதுல்லா (26). இவர் மரக்காணம் அருகே கூனிமேடு கிராமம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த சஹானா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து மாமியார் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கூனி மேடு கிராமத்திலேயே ரஹமதுல்லா தனது மனைவியுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஹமதுல்லா மனைவி சகானாவுக்கும், கூனிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷா (25) என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

இந்த விபரம் ரஹமதுல்லாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பலமுறை தனது மனைவியுடன் வைத்துள்ள தொடர்பை கைவிடுமாறு சாதிக் பாஷாவிடம் ரஹமதுல்லா எச்சரித்துள்ளார். ஆனால் சாதிக் பாஷா சஹானா உடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களும் சாதிக் பாஷாவை அழைத்து கடந்த 2 மாதத்திற்கு முன் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ரஹமதுல்லா கூனி மேட்டில் இருந்து தனது வீட்டை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான திண்டிவனம் அருகிலுள்ள முருங்கைபாக்கம் பகுதியில் தனது மனைவியுடன் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வசித்து வந்துள்ளார்.

ஆனால் சாதிக் பாஷா சஹானாவுடனான உறவை விடாமல் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஹமதுல்லா தனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ள சாதிக் பாஷாவை தீர்த்துக்கட்ட சரியான தருணத்தை எதிர்பார்த்து இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சாதிக் பாஷா தனது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இதனை அறிந்த ரஹமதுல்லா கூலிப்படையை சேர்ந்த நான்குபேருடன் சென்று கத்தியால் சாதிக்பாஷாவின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாதிக்பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிர் இழந்துள்ளார். சாதிக் பாஷா இறந்து விட்டதை உறுதி செய்த கூலிப்படைகள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பி ஓடி விட்டனர்.

சம்பவ நடந்த நேரம் இரவு என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்லாததால் சாதிக் பாஷாவின் கொலை சம்பவம் உடனடியாக அவரது வீட்டாருக்கு தெரியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் சாதிக்பாஷா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவரது வீட்டிற்கு தகவல் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாதிக் பாஷாவின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் மரக்காணம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சாதிக்பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மரக்காணம் காவல்துறையினர்.

கொலை சம்பவத்தில் தொடர்வுடைய ரஹமதுல்லா மற்றும் புதுவை மாநிலம் அருகிலுள்ள கலிதீர்த்தான் பட்டு கிராமத்தை சேர்ந்த பாரதிதாசன் (28), ஆனந்தராஜ் (21), திருவக்கரை அருகிலுள்ள கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயனார் மகன் குணசேகரன்(22), புதுவை மாநிலம் பத்து கண்ணு பகுதியிலுள்ள சின்ன அம்மானாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன். செல்வகுமார் (23) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article