"மயிலாப்பூரில் பாஜக-வின் அனல் பறக்கும் பிரச்சாரம்!" – தமிழிசைக்காக வீதியில் இறங்கிய அண்ணாமலை

2 days ago 2
ARTICLE AD

சென்னை மக்கள் கோடிக்கணக்கில் வரிமேல் வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட அவல நிலையில்தான் இன்றும் இருக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ள புண்ணிய பூமியான, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். கடந்த 5 ஆண்டுகால, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்ததுதான் திமுக தனது ஆட்சியில் செய்துள்ள ஒரே சாதனை. தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சிங்கார சென்னையை, “sinking” சென்னையாக மாற்றி மழைநீர் வடிகால் என்ற பெயரில் திமுகவினர் ரூ.4000 கோடி முறைகேடு செய்யவே ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

சென்னை மக்கள் கோடிக்கணக்கில் வரிமேல் வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட அவல நிலையில் தான் இன்றும் இருக்கிறது என்பது வெட்கக்கேடு. கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் மட்டுமே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி. மாற்றத்தின் நம்பிக்கையாக, மக்களாட்சியின் அடையாளமாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும், மயிலாப்பூர் தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை தாமரைச் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article