மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை ; விசயம் இதுதாங்க..!

1 year ago 7
ARTICLE AD

அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம்

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, செய்தி ஊடகங்கள், அறிவிப்பு கடிதம் மற்றும் பல கூட்டங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

SS Balaji Vck Interview : மது ஒழிப்பு மாநாடு, அரசியல் செய்தது அதிமுக: விசிக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாடு

இருப்பினும் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த சில மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்டும் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட தொடர் அறிவுறுத்தலுக்கு பிறகும் சட்ட விதிகளுக்கு கட்டுப்படாமல் சுருக்குமடி வலையினை படகில் ஏற்றி வைக்கபட்டுள்ளது தெரிய வருகிறது.

ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை - சொதப்பிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா! பட்டியலில் எத்தனையாவது இடம்?

சுருக்குமடி வலைகளை அப்புறப்படுத்த வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியிலும் மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன், படகில் ஏற்றி வைத்திருக்கும் சுருக்குமடி வலையினை அகற்றவும், மேலும் மீனவர்கள் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீன்பிடி துறைமுக வளாகத்தில் வைத்திருக்கும் சுருக்குமடி வலைகள் அனைத்தையும் அகற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

இவ்வறிவுரைகளை மீறி யாரேனும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி சுருக்குவலையை பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இவ்வகையான மீன்பிடிப்பில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மீனவர்கள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!

மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Read Entire Article