மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி நாள்!

5 months ago 4
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூலை 21, 2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்போது கீழ்க்கண்ட தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

செவிலியர் (Staff Nurse)

மருந்தாளுநர் (Pharmacist)

ஆய்வக நுட்புநர் (Lab Technician)

பார்வை தேர்வாளாளர் (Ophthalmic Assistant)

சிகிச்சை உதவியாளர் (ஆண்) (Therapy Assistant - Male)

தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multi-Purpose Hospital Worker)

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக மட்டுமே நியமிக்கப்படும். எனவே, பணி நியமனம் நிரந்தரமானது அல்ல என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தகுதி, ஊதியம் மற்றும் விண்ணப்பப் படிவம்

ஒவ்வொரு பணியிடத்திற்கும் வெவ்வேறு கல்வித் தகுதிகள், வயது வரம்புகள் மற்றும் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.

இந்தப் பணியிடங்களுக்கான விரிவான தகுதி விவரங்கள், ஊதியக் கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு, தேவையான தகவல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், மேற்கண்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609 001.

விண்ணப்பங்கள் விரைவுத் தபால் (Speed Post) அல்லது பதிவுத்தபால் (Registered Post) மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 21, 2025, மாலை 5 மணி ஆகும். குறித்த காலத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்புகள்

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்ப வேண்டும்.

தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்காலிகப் பணி நியமனம் என்பதால், தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் சமூக சேவை செய்வதோடு, தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

Read Entire Article