மன்னரின் நடுக்கம் தீர்த்த கம்பகரேசுவரரின் வரலாற்றுப் பின்னணி!

4 months ago 5
ARTICLE AD

கும்பகோணம்: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு திருக்கோயிலின் பின்னணியிலும், அங்கு வீற்றிருக்கும் இறைவனின் திருநாமத்திற்குப் பின்னணியிலும் ஏதேனும் ஒரு புராண அல்லது இதிகாசக் காரணம் மறைந்திருப்பது வழக்கம்.

அந்த வகையில், மன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ் மற்றும் குடும்பம் என அனைத்தையும் மீண்டும் பெற வழிவகை செய்ததோடு, அவரது உடலை உலுக்கிய நடுக்கத்தையும் போக்கிய வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு தலம் தான் திருபுவனம் கம்பகரேசுவரர் திருக்கோயில்.

கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலத்தின் ஆன்மீகப் பின்னணியை இங்கு விரிவாகக் காண்போம்.

பட்டின் பெருமையும் சோழர்களின் கடைசி கட்டுமானமும்!

"பட்டு" என்று சொன்னவுடனேயே நம் நினைவுக்கு சட்டென்று வருவது திருபுவனம் திருத்தலம் தான். உலகப் புகழ்பெற்ற பட்டு நெசவுக்கு மட்டுமன்றி, பக்திக்கும் பெயர்பெற்ற இந்த ஊரில் அமைந்துள்ள கம்பகரேசுவரர் ஆலயம், கலை நயத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

இத்திருக்கோயில், சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னனான மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மாபெரும் சோழர் காலக் கோயில்களின் கட்டடக்கலை அமைப்பை இக்கோயிலும் அப்படியே பிரதிபலிக்கிறது.

வடநாட்டுப் போர்களில் தான் பெற்ற வெற்றியின் மூலம் கொண்டுவரப்பட்ட பொன், பொருள் மற்றும் செல்வங்களைக் கொண்டு குலோத்துங்க சோழனால் இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பின்வந்த மன்னர்களால் இது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழப் பேரரசர்களால் கட்டப்பட்ட "கடைசிப் பெரிய கோயில்" இதுதான் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கம்பகரேசுவரர்: பெயர்க் காரணமும் பாண்டிய மன்னனின் கதையும்

இக்கோயிலில் வீற்றிருக்கும் மூலவரான கம்பகரேசுவரர் மற்றும் உலகப் புகழ்பெற்ற சரபேஸ்வரர் ஆகிய இரு தெய்வங்களுக்கும் தனித்தனிப் புராணக் கதைகள் உள்ளன. இதில் ‘கம்பகரேசுவரர்’ என்பதற்கு ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று பொருள். இவருக்கு இப்பெயர் வரக் காரணமான வரலாற்று நிகழ்வு இதோ:

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை வரகுண பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் மேற்கொண்ட ஒரு போரில் எதிரிகளைத் துவம்சம் செய்துவிட்டு, தனது குதிரையில் வேகமாக அரண்மனை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, வழியில் இருந்த ஓர் அந்தணர் (பிராமணர்) மீது குதிரை ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மன்னரை ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக் கொண்டது.

திருவிடைமருதூர் டூ திருபுவனம்: நேர்கோட்டு அதிசயம்!

தோஷத்தின் பிடியால் புத்தி சுவாதீனம் குறைந்து, நிலைதடுமாறி ஊர் ஊராக ஓடித் திரிந்தார் வரகுண பாண்டியன். அப்படி அவர் அலையும்போது, அவரது கண்ணில் பட்டதுதான் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில். மன்னர் அக்கோயிலின் உள்ளே நுழைந்த மாத்திரத்திலேயே, அவரைப் பின்தொடர்ந்த பிரம்மஹத்தி தோஷம் உள்ளே வர முடியாமல் வாசலிலேயே நின்றுவிட்டது.

இதனால் மன்னருக்குச் சுயநினைவு திரும்பியது. எனினும், தோஷத்தின் பயத்தால் ஏற்பட்ட அவரது உடலின் நடுக்கம் மட்டும் நிற்கவில்லை. மீண்டும் வந்த வாசல் வழியே திரும்பினால் பிரம்மஹத்தி தோஷம் தன்னை மீண்டும் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், அவர் உடல் மேலும் நடுங்கியது.

இதையடுத்து, அவர் திருவிடைமருதூர் கோயிலின் பின்வாசல் வழியே வெளியே ஓடினார். இங்குதான் ஒரு பெரும் அதிசயம் உள்ளது; திருவிடைமருதூர் கோயிலின் பின்வாசலும், திருபுவனம் கோயிலின் முன்வாசலும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

நடுக்கம் தீர்த்த நாதனும், அறம் வளர்த்த நாயகியும்!

பின்வாசல் வழியே ஓடிவந்த பாண்டிய மன்னர், நேரே திருபுவனம் கோயிலுக்குள் நுழைந்து மூலவரின் சந்நிதியில் சரணடைந்தார். கம்பகரேசுவரை வணங்கிய அடுத்த கணமே, மன்னரின் உடலில் பல நாட்களாக இருந்த நடுக்கம் முற்றிலும் நின்றது; பழைய தெம்பும், ராஜ வம்சத்துக்கே உரிய வலுவும் மீண்டும் அவரிடம் குடியேறியது. ‘கம்பகம்’ என்றால் நடுக்கம் என்று பொருள். மன்னரின் நடுக்கத்தைப் போக்கி அருளியதால், இத்தல இறைவன் ‘கம்பகரேசுவரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானை வணங்கிய பிறகு, மன்னர் அங்குள்ள அம்பாள் ‘தர்மசம்வர்த்தினி’ சந்நிதிக்குச் சென்று வணங்கினார். தான் ஒரு பேரரசன் என்பதையே மறந்து அலைந்து திரிந்த மன்னருக்கு, அவர் ஓர் அரசன் என்பதை மீண்டும் நினைவுபடுத்தி, அவர் இழந்த நாடு மற்றும் ஆட்சியை மீட்டுக் கொடுத்தது இந்த அம்பிகைதான். அதனாலேயே இந்த அன்னைக்கு தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

இன்றும் மனக்குழப்பம், தீராத பயம், உடல் நடுக்கம் மற்றும் இழந்த பதவிகளை மீண்டும் பெற நினைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களின் குறைகள் நீங்கிப் பழைய நிலையை அடைய திருபுவனம் கம்பகரேசுவரரை நாடி வந்து வழிபட்டுப் பயனடைந்து வருகின்றனர்.

Read Entire Article