மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்

2 weeks ago 3
ARTICLE AD

நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டதால் கணவனே மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது மனைவி செல்வி (51). இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக  புரோக்கர் மூலமாக கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த டி.வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தங்கி அதனைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டு

மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது அதிக மது போதையில் இருந்த சங்கர், தனது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவதூறாகப் பேசியுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது சண்டை அதிகரித்து ஆத்திரத்தில், செல்வியின் முகத்தில் சங்கர் பலமாகத் தாக்கியதில் கீழே விழுந்த மனைவியை கணவர் விடாமல் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மறுநாள் தனது மனைவி குடிபோதையில் இறந்துவிட்டதாகத் தோப்பு உரிமையாளர் ராமலிங்கத்திற்கு சங்கர் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.ஆனால், சந்தேகமடைந்த ராமலிங்கம் விசாரித்தபோது, செல்வியின் முகத்தில் ரத்த காயங்கள் இருப்பதும், சங்கர் தலைமறைவானதும் தெரியவந்தது.

இது குறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த சங்கரை போலீசார் பிடித்து காவல் பாதுகாப்பில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article