மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!

1 week ago 4
ARTICLE AD

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் விஜேஷ் (40). விஸ்மயா (18) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இருவருக்கும் திருமணமான தொடக்கத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இருவருக்கும் 22 வயது வித்தியாசம்.

கருத்து வேறுபாடு

இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜேஷ் அவ்வப்போது அங்கு சென்று வந்த நிலையில், இருவருக்கும் இடையே விவாகரத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு கணவர் விஜேஷ் சம்மதிக்கவில்லை. மனைவியுடன் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என வலியுறுத்தி வந்துள்ளார்.

இதையும் படிங்க: School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

மனைவி நடத்தையில் சந்தேகம்

இதனிடையே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருடன் விஸ்மயாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு அவர் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் விஜேஷுக்கு மனைவி மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.மேலும் கணவன்-மனைவி இடையே நீடித்து வந்த குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சந்தேகத்தின் காரணமாக ஏற்பட்ட தகராறில், விஜேஷ் தனது மனைவியையும், குழந்தையையும் கொடூரமாக தாக்கி துடிதுடிக்க படுகொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

கணவர் கைது

இச்சம்பவம் குறித்துத் வழக்குப் பதிவு செய்துள்ள வலப்பாடு காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற விஜேஷைக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article