மனைவி குடும்பம் வர மறுத்ததால் ஆத்திரம் ! மாமியாரை சரமாரியாக வெட்டிய மருமகன் கைது - பரபரப்பு

1 month ago 2
ARTICLE AD

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமியாரை சரமாரியாக வெட்டிய மருமகன் கைது

சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் வசித்து வருபவர் உஷா ( வயது 42 ) இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் ரோஜா என்பவர் வெற்றிவேல் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து ரோஜா தற்போது புளியந்தோப்பில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி வெற்றிவேல் குடித்து விட்டு தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு புளியந்தோப்பு பகுதிக்கு வந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

வெற்றிவேல் தனது மாமியார் உஷா வீட்டிற்கு வந்து , தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் வெற்றிவேலுக்கும் ரோஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வெற்றிவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவி ரோஜாவை வெட்ட வரும் போது ரோஜாவின் தாயார் உஷா அதை தடுக்கவே உஷாவுக்கு இடது கையில் சரமாரியாக வெட் டு விழுந்தது.

இதில் உஷாவின் இடது கை மணிக்கட்டு உடைந்து. ரோஜாவையும் சரமாரியாக தாக்கி விட்டு வெற்றிவேல் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் ( வயது 26 ) என்ற நபரை கைது செய்தனர். இதனையடுத்து வெற்றி வேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெரவள்ளூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற சரித்திர பதிவேடு ரவுடி கைது

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் வசித்து வருபவர் சார்லஸ் ராஜ் ( எ ) லல்லு சார்லஸ் இவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ளன. 2020 ஆம் ஆண்டு பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் தொடர்ந்து சார்லஸ் ராஜ் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் 16 ஆம் தேதி சார்லஸ் ராஜை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து பெரவள்ளூர் போலீசார் சார்லஸ் ராஜை தேடி வந்த நிலையில் பெரவள்ளூர் முத்துக் குமாரப்பா சாலை ரயில்வே பார்டர் அருகே சார்லஸ் ராஜ் இருப்பதை அறிந்த பெரவள்ளூர் போலீசார் அவரை பிடிக்க முற்பட்டனர்.

அப்போது காவலர்களை தாக்கி விட்டு சார்லஸ் ராஜ் தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து பெரவள்ளூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சார்லஸ் ராஜ் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் கஞ்சா வழக்குகள் உட்பட ஏழு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article