மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!

3 months ago 8
ARTICLE AD

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

குறுவை சாகுபடி பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு: நிகழாண்டு ஜூன் மாதத்தில் வழக்கமாக திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள், அடுத்தபடியாக மேற்கொள்ள வேண்டிய சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற பெரும் ஏக்கத்தில் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வறட்சி நிவாரணமாக வழங்கிட அரசு ஆவண செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் வாக்குறுதி மற்றும் காவிரி நீர் உரிமை

தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தமிழக அரசு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடுத்து நிறுத்த தீவிர நடடிவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்திற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் பங்கினைத் தமிழக அரசு உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை - தஞ்சை இரட்டை ரயில்பாதை திட்டம்

மத்திய அரசு சார்ந்த கோரிக்கையாக, டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையேயான இரட்டை ரயில்பாதை திட்டத்தை உடனடியாகத் தொடங்கி செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை விரைந்து முடிக்கத் தேவையான அழுத்தங்களைத் தமிழக அரசு மத்திய அரசுக்குத் தர வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் செய்தியாளர்கள் சந்திப்பில், "டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாததால் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. அரசு உடனடியாகத் தலையிட்டு வறட்சி நிவாரணம் வழங்காவிட்டால், விவசாயிகளின் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்."

இக்கூட்டத்தின் நிறைவாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களைத் தமிழக முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

Read Entire Article