தஞ்சாவூர்: AAICLAS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு. இந்திய விமான நிலைய சரக்கு சேவை நிறுவனமான AAICLAS (AAI Cargo Logistics & Allied Services Company Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant (Security) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இதில் மொத்தம் 62 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விமான நிலைய வாரியான காலியிடங்கள் மற்றும் பணியிடம்

தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர் மற்றும் உதய்பூர் ஆகிய விமான நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

திருச்சி – 23 காலியிடங்கள்
உதய்பூர் – 12 காலியிடங்கள்
மதுரை – 09 காலியிடங்கள்
திருப்பதி – 09 காலியிடங்கள்
புவனேஸ்வர் – 09 காலியிடங்கள்

கல்வித் தகுதியும் வயது வரம்பும்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது தளர்வு விபரம்:

OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): 5 ஆண்டுகள்

மாதச் சம்பளம்

இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆண்டுதோறும் சம்பள உயர்வுடன் கூடிய கவர்ச்சிகரமான ஊதியம் வழங்கப்படும்.

முதல் வருடம்: ரூ.21,500/-

இரண்டாம் வருடம்: ரூ.22,000/-

மூன்றாம் வருடம்: ரூ.22,500/-

தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிப் பட்டியல் (Short Listing) அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தொடர்ந்து நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ST / SC / பெண்கள் / EWS பிரிவினர்: ரூ.100/-

இதர பிரிவினர் (Others): ரூ.500/-

கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

ஆர்வமுள்ளவர்கள் 02.07.2026 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.aaiclas.aero/career) செல்லவும். அதில் “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

புதிய பயனராக இருந்தால், முதலில் உங்கள் விவரங்களைப் பதிவு (Registration) செய்ய வேண்டும்.

பின்னர், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு 'Login' செய்து விண்ணப்பப் படிவத்தை துல்லியமாக நிரப்பவும். கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் உங்களுடைய அண்மைக்கால புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை 'Submit' செய்யவும். இறுதி விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக PDF வடிவில் பதிவிறக்கம் (Download) செய்து அச்சுப் பிரதி எடுத்துக் கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருப்பதை விண்ணப்பதாரர்கள் முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.