மத்திய அரசு SECI-யில் இன்ஜினியர், மேலாளர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

1 month ago 4
ARTICLE AD

மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI) நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியர், துணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., சி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் நவரத்னா நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனியர் இன்ஜினியர், துணை மேலாளர், ஆபிசர், அக்கவுன்ட்ஸ் ஆபிசர், ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில்), துணை மேலாளர் (எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி., சோலார் உள்ளிட்ட பிரிவுகள்), ஆபிசர் (லீகல், எச்.ஆர். மற்றும் நிர்வாகம்), அக்கவுன்ட்ஸ் ஆபிசர், இன்ஜினியர், துணை பொது மேலாளர் மற்றும் ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிக்கு ஏற்ப பி.இ., பி.டெக்., சட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ. உள்ளிட்ட கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு மற்றும் பணி அனுபவம் பதவிக்கு ஏற்ப மாறுபடும். சில பணிகளுக்கு குறைந்தது ஒரு ஆண்டு அனுபவமும், உயர் பதவிகளுக்கு பல ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணமும் பணியைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பணிகளுக்கு ரூ.500-ம், சில பணிகளுக்கு ரூ.1,000-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 23.9.2026 மாலை 5 மணி ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் SECI-யின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் முழுமையான அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

Read Entire Article