<p>தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் நாளை 26ம் தேதி பொது ஏலத்தில் விட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>பொது ஏலமானது, நாளை 26.12.2025 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.</p>
<p>வாகனங்கள் மேற்படி பழைய ஆயுதப்படை ஏலத்திற்குண்டான மைதானத்தில் நாளை 26.12.2025 அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 26.12.2025 அன்று காலை 7 முதல் 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரு.5,000 முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.</p>
<p>மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் GST விற்பனை வரி 18 % ஆகியவற்றை சேர்த்து 26.12.2025 அன்று உடனே செலுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p>