மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக இரண்டாம் மாநில மாநாட்டிற்கு 3,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்

மாநாட்டில் கொடியேற்றும் தவெக தலைவர்

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில், 600 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றி கழகத்தின், 2-வது மாநில மாநாடு, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே, உள்ள நிலையில் பணிகள் தீவிர படுத்தப்பட்டு முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் அமைக்கப்பட்டது போல, பிரம்மாண்ட கொடி கம்பம் ஒன்று மதுரை மாநாட்டிலும் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டுப் பணிகள் கிட்டதட்ட 95% பணி முடிந்தது. தவெக கொடிக்கம்பம் 100 அடிக்கு பிரம்மாண்டமாக அமைவது குறிப்பிடதக்கது.

100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தவெக கொடிக்கம்பம்

நடப்பட உள்ள கொடிக்கம்பத்தில் தவெக தலைவர் விஜய் தவெக கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாநாடை துவங்கி வைக்க உள்ளார். இந்த கொடிக்கம்பம் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மாநாட்டின் முகப்பு ஆ ர்ச் முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது. ரோட்டில் இருந்து மாநாட்டு திடலுக்குள் நுழையும், நுழைவு வாயிலில் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தவெக கொடிக்கம்பம் அமைக்கப்பட உள்ளது. ஐந்து அடிக்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் காங்கிரட் கலவைகள் போடப்பட உள்ளது, அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பம் கொண்டுவரப்பட்டு நடப்பட உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தவெக மாநாட்டிற்கு பாதுகாப்பு

தென் மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என 3 மண்டலத்தை சேர்ந்த சுமார் 3600 காவல் துறையினர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மூன்று மண்டலத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் 10 காவல் ஆணையாளர்கள், 10 காவல் கண்காணிப்பாளர்கள், 35 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 80 காவல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மாநாட்டு திடல் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனங்களும் மாநாட்டு திடல் பகுதியில் நிறுத்தப்பட உள்ளது.