மதுரையில் தனது ஆதரவாளர் இல்ல திருமணவிழாவில்... மு.க அழகிரி - வேக வேகமாக புறப்பட்டது ஏன்?

2 weeks ago 3
ARTICLE AD

மதுரையில் தனது ஆதரவாளர் இல்ல திருமணவிழாவில்  பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு்.க அழகிரி - செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 2014 மார்ச் 25 அன்று தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து மு.க ஸ்டாலினுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை கூட்டி கூட்டம் நடத்தினார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விடுத்து தனது ஆதரவாளர்களின் நிகழ்ச்சிகளிலும் மட்டும் பங்கேற்றுவருகிறார்.

செய்தியாளர்களை சந்திக்காமல் அவரது ஆதரவாளர்கள் மு.க.அழகிரியை அழைத்துசென்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டத்தில் மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி இணையவுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளரான முபாராக் மந்திரியின் மகள் திருமண விழாவிற்கு தனது மனைவி காந்தியுடன் மு.க.அழகிரி பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்காமல் அவரது ஆதரவாளர்கள் மு.க.அழகிரியை அழைத்துசென்றனர்.

Read Entire Article