மதுரை கிழக்கு தொகுதியில் 150 குடியிருப்போர் நலச் சங்கங்களை உடனுக்குடன் தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம், அது போல கோவில் பாப்பாகுடி ஊராட்சியிலும் செய்யப் போறோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் குடியிருப்பு பகுதியாக மாற்றம்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவில் பாப்பாகுடி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஐந்து கோடி மதிப்பீட்டில் 40 பேவர் பிளாக் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் உரையாற்றிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “நகர்ப்புறத்திற்கு நெருக்கமாக உள்ள பகுதியான கோவில் பாப்பாக்குடி ஊராட்சி கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் குடியிருப்பு பகுதியாக மாற்றம் அடைந்துள்ளது.

ரூ.5 கோடி மதிப்பில் 40 பேவர் பிளாக் சாலைகள்

எனவே இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் விதமாக ரூ.5 கோடி மதிப்பில் 40 பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணி ஒரு மாதத்தில் முடிந்து எஞ்சியுள்ள 34 தெருக்களிலும் தார் சாலைகள் அமைக்கும் பணியும் விரைவாக நடைபெறும். என, தங்களிடம் உறுதி அளிக்கிறேன். தங்களது கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிறைவேற்றித் தரும் பொறுப்பை மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சி நடத்தி, வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எங்களிடம் ஒப்படைத்துள்ளதோடு எல்லோருக்கும் எல்லாம் வழங்கிட வேண்டும்., என்ற உயர்ந்த நோக்குடன் பல்வேறு திட்ட பணிகளை இந்த பகுதி வாழ் மக்களுக்கு செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கோவில் பாப்பாகுடி திகழும்

அதன்படி எப்படி மதுரை கிழக்கு தொகுதியில் 150 குடியிருப்போர் நல சங்கங்களை உடனுக்குடன் தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோமோ, அதே போல் கோவில் பாப்பாகுடி ஊராட்சியிலும் குடியிருப்போர் நலச் சங்கங்களை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிய நடவடிக்கை எடுப்போம். குடிநீர் வசதியாக இருந்தாலும் சரி, சாலை வசதியாக இருந்தாலும் சரி, மின்விளக்கு வசதியாக இருந்தாலும் சரி, அத்தனையும் நிறைவேற்றி தர தயாராக இருக்கிறோம். விரைவில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கோவில் பாப்பாகுடி திகழும்” என்றார்.

இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மோனிகா ரானா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இந்துமதி, திமுக நிர்வாகிகள், பரவை ஜெயராமன், விளாங்குடி தனசேகரன் ஜி பி ராஜா மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tungsten Protest: டங்ஸ்டன் திட்டம் ரத்து; போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி - சமூக ஆர்வலர் பெருமிதம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thiruparankundram: விண்ணை முட்டிய அரோகரா சத்தம்.. குன்றத்தில் ஏறியது சுப்பிரமணியனின் கொடி !