தெலங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து நாகர்கோவில் ரயில் (07435) ஏப்ரல் 04 முதல் மே 05 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில்இருந்து கச்சக்குடா ரயில் (07436) ஏப்ரல் 06 முதல் மே 04 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

மதுரை - கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு

அதே போல், ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து மதுரை ரயில் (07191) ஏப்ரல் 07 முதல் மே 05 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு புதன் கிழமைகளில் அதிகாலை 01.20 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து கச்சக்குடா ரயில் (07192) ஏப்ரல் 09 முதல் மே 07 வரை புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் மதியம் 01.25 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நடிகரும், கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Job Fair: வேலை தேடும் சிவகங்கை இளைஞர்களே... இதோ உங்களுக்கான நேரம் வந்தவிட்டது.. மிஸ் பண்ணாதீங்க