நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வழக்குகளை வழக்கறிஞர்கள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான கருத்துக்களை தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பமும் சட்ட பயிற்சி முகாமும்

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் தென் தமிழ்நாடு பேரையூர் கிளையின் சார்பாக சட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சட்ட பயிற்சி முகாமில் துவக்க நிகழ்வாக வழக்கறிஞர் முத்துக்குமார் வரவேற்றார். தென்மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் பழனிக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தலைமை உரை நிகழ்த்தினார். நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வழக்குகளை வழக்கறிஞர்கள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான கருத்துக்களையும், உச்ச நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞர்கள் பயிற்சி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சத்யா ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலை எளிமையாக கையாளுதல், முன் தீர்ப்பு ஆவணங்களை சேகரிப்பது, நவீன தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைத்தார். நிகழ்வில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் பிரசாத், மூத்த வழக்கறிஞர்கள் பூமிநாதன், சிவக்குமார், ரமணி, ராஜா, ராஜேந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றார்கள். வழக்கறிஞர் செந்தில்குமார் நன்றி உரை ஆற்றினார். வழக்கறிஞர்கள் செல்வகுமார், கருப்பசாமி ஏற்பாடு செய்தார்கள்.