ரஜினி புகைப்படத்திற்கு 501 வடைகள் கொண்ட மாலை, 5 ஆயிரம் பிரத்தியேக புகைப்படம், 5 வகை அபிஷேகம் - ரஜினி கோவிலில் சிறப்பு சிவராத்திரி பூஜை !

மதுரையில் ரஜினி கோயில்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கார்த்திக். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து தற்போது புதிதாக வெளியான படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது வீட்டில் ரஜினிக்கு என்று ஒரு கோவில் போன்ற அமைப்பை தயார் செய்து அதில் ரஜினியின் பல்வேறு புகைப்படம் வைத்து வழிபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் 73 வது பிறந்தநாள் முதல் மூன்றடி உயரம் 250 கிலோ கருங்கல்லில் சிலை மூலவராகவும் மற்றும் 300 கிலோ கருங்கல் சிலை உற்சவரராகவும் அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஜினி சிலைக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வருகிறார்.

ரஜினி கோவிலில் 4 கால பூஜை

இந்த அன்பை பாராட்டும் வகையில் நடிகர் ரஜினியே, கார்த்திகேயனின் குடும்பத்துடன் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து ரஜினி கோவிலை பராமரித்துவரும் கார்த்தி, சிவாராத்திரையை முன்னிட்டு ரஜினி கோயிலில் 4 கால பூஜை செய்தார். அப்போது ரஜினிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 5 வகையான அபிஷேகங்களையும் செய்து குடும்பத்துடன் வழிபட்டார். கைலாய வாத்தியங்களான உடுக்கை, டமரம், கொம்பு உள்ளிட பாரம்பரிய இசைக்கருவிகளையும் பயன்படுத்தி வழிபட்டனர்.

ரஜினி கோவிலில் 3-வது ஆண்டாக சிவராத்திரி பூஜை

தொடர்ந்து கார்த்திக் நம்மிடம் பேசுகையில்...," ரஜினி கோயிலில் 3-வது ஆண்டாக சிவராத்திரி பூஜை செய்து வழிபடுகிறோம். இதற்காக 1993-ஆம் ஆண்டு ரஜினி அவர்கள் நடித்த உழைப்பாளி படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிவன் வேடத்தை பயன்படுத்தி அதில் 501 வடைகள் மூலம் மாலை சாத்தி வழிபட்டோம். மேலும் 5001 ரஜினியின் பிரத்தியேக புகைப்படத்தை படுத்தியுள்ளோம். 50 ஆண்டு சினிமாவில் பயணிக்கும் ரஜினி அவர்களின் போற்றும் வகையில் வடை எண்ணிக்கை 501 என்றும், நெற்றிக்கண்ணை குறிக்கும் வகையில் 5001 நெற்றிக் கண் புகைப்படத்தையும் பயன்படுத்தியுள்ளேன். மேலும் வடை மாலை பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் போல் வடையை வழங்கினோம் எனவும்" தெரிவித்தார்.