மதுரை மேயர், டிஜிபி நியமனம் இல்லை: கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்... விவசாயிகள் நிலை என்ன?

1 month ago 3
ARTICLE AD

மதுரை மேயரையும் நியமனம் செய்யவில்லை, சட்ட ஒழுங்கை காப்பாற்றும் டிஜிபியும் நியமனம் செய்ய முடியாமல் இயாலமை உள்ள அரசாக திமுக அரசு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சார் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்...,” குழந்தைகள் காற்றில் பலூன் பட்டங்களை பரப்பி விடுவார்கள். அதே போல இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அவல நிலை உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவேன் என்று கூறிவிட்டு, தற்போது முதலமைச்சராக வந்த பின் ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார். எதிர்க்கட்சியாக ஆறுதல் கூறியவர் தற்போது வாய் திறக்காத மர்மம் என்ன? இதனால் அரசு ஊழியர்கள் எங்கள் ஆதரவில்  நீங்கள் ஆட்சி  அமைத்தீர்கள், 2026 ஆண்டில் திமுகவை  நாங்கள் வீட்டுக்கு அனுப்பவோம் என்று உறுதி பட கூறிவருகிறார்கள்.

இயலாமை உள்ள அரசாக உள்ளது

புதிய டிஜிபி ஏன் நியமனம் செய்யவில்லை? என்று தொடர்ந்து எடப்பாடியார் கேள்வி எழுப்பி வருகிறார். இன்றைக்கு ஒன்னரை மாதம் கழித்து மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலில் மூலம் புதிய டிஜிபியை தேர்வு செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே மதுரை மாநகராட்சி மேயரை புதிதாக இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. சட்ட ஒழுங்கை காப்பாற்றும் டிஜிபியை இன்னும் தேர்வு செய்யவில்லை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்க முடியவில்லை. இப்படி எதுவும் செய்ய முடியாமல் இயலாமை உள்ள அரசாக திமுக அரசு உள்ளது.

திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டனர்.

வடகிழக்கு பருவமழை குறித்து தொடர்ந்து எடப்பாடியார் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறார். தற்போது கூட  எடப்பாடியார் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முதல் முதலில் களத்துக்கு சென்றார். அதில் தஞ்சையில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் வழங்கினார். டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான டன் நெல்மணிகள் மழையால் வீணாய் போனது. தற்போது பருவமழையால் மகசூல் அதிகமாக இருந்தும் அதைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. இன்றைக்கு திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டனர். இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், விவசாயிகள் எல்ல தரப்பினரும் இந்த ஆட்சியில்  மீது அதிருப்தியில் உள்ளனர். மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப 2026 ஆண்டில் நாட்களை குறித்து விட்டனர். நிச்சயம் எடப்பாடியாரின் தலைமையில் நல்லாட்சி நடக்கும் அப்போது விவசாயிகளின் கண்ணீரை துடைப்பார்” எனக் கூறினார்.

Read Entire Article