பின் வரும் வழிமுறைகளை பின் பற்றும் போது, குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் ( ஜூலை 07, 2025) அன்று மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.

நாளை (ஜூலை 7) மின்தடை (காலை 9:00 மணி - மாலை 5:00 மணி)

மதுரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக் காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பீபிகுளம், மருதுபாண்டியர் நகர், கண்ணனேந்தல், சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மண்மலைமேடு, விஜய் நகர், கலை நகர், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்ட வுன், பி மற்றும் டி காலனி, பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, செட்டிகுளம், சண்முகா நகர் ஆகிய பகுதிகளாகும்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.