ஸ்டார் ஹோட்டல்ல போல மாற்றப்பட்ட மதுரை தெற்கு வாசல் காவல்நிலையம்.

தெற்குவாசல் காவல்நிலையம்

மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக காவல் நிலையங்கள் மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு என 36 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காவல்நிலையம் என்றாலே ஒருவித பதட்ட மன நிலையில் பொதுமக்கள் செல்வர். மாநகர் முழுவதும் ஒரே மாதிரியான காவல்நிலையங்கள் இருந்தாலும் கூட இதற்கெல்லாம் முன்னுதாரணமாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள தெற்கு வாசல் காவல் நிலையம் காண்போரை கண் கவர வைக்கிறது. காவல் நிலையத்திற்குள் நுழையும் போதே ஸ்டார் ஹோட்டலா என எண்ணும் அளவிற்கு மூன்று தளங்களாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்திற்கு உள்ளே நுழையும் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய அளவிலான பார்க், புகார் அளிக்க வரக்கூடிய பொதுமக்கள் அமர்வதற்கு சோபா செட் மற்றும் பசுமை நிறத்தில் பின்னணி என வியக்கவைக்கிறது.

அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் காவல் நிலையத்தின் உட்புறம் உள்ள சுவர்கள் பூக்கள் போன்று வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஆண், பெண் சிறை அறைகளில் உள்ளே தவறு செய்துவிட்டு இருக்கக்கூடியவர்கள் மனம் திரிந்து வாழும் வகையில் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும் ஓவியங்கள்; மதுப்பழக்கத்திற்கு அடிமையாகுவதால் ஏற்படும் தீமைகள், சிறைவாழ்க்கையால் ஏற்படும் குடும்ப தவிப்பு கோபத்தில் செய்யக்கூடிய குற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிந்திக்க வைக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அமரும் பகுதி, கூட்டரங்கு பகுதி, ஆய்வாளர், சார் ஆய்வாளர்களுக்கான அறைகள் என ஒவ்வொன்றும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன.

காவல்நிலையத்தில் மன அமைதி

மேலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம், காவலர்கள் அமர்வதற்கான இருக்கை , ஜன்னல்களில் தோரணை, இலைகள் போன்று என மூன்று தளங்களாக உள்ளது தெற்கு வாசல் காவல் நிலையம். காவல் நிலையம் என்றாலே ஒரே மாதிரியான அமைப்போடு பதற்றத்துடன் காவல் நிலையத்திற்குள் நுழையக்கூடிய பொது மக்களுக்கு காவல் நிலையத்திற்குள் நுழையும் போதே மன அமைதியோடு வந்து செல்லக்கூடிய அளவிற்கு பிண்ணனி சூழலை உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் காவல் நிலையம் மேலும் படிக்கட்டுகளில் செல்லும்போது அலங்கார பூக்கள் என பார்ப்பதற்கு மிகுந்த அழகான காவல்நிலையமாக காட்சியளிக்கிறது.