தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்

தொடர் மழையால் சாலையோர வியாபாரிகளுக்கான வியாபாரம் குறைந்துள்ளதாக கவலை

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் மதுரை மாசி வீதிகளில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஜவுளி ,நகை வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர். மதுரை விளக்குத்தூண் ,தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி ,வடக்கு மாசி வீதி மற்றும் வெளி வீதிகள் , ஆவணி மூல வீதிகளில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை ,தேனி திண்டுக்கல் ,விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொதுமக்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிங்கப்பெண் அதிரடி படையினர் பெண்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மழை பெய்து வருவதால் வியாபாரம் இல்லாத நிலையில் சோகத்துடன் உள்ளனர்.

அதேபோன்று மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். மாசி வீதி பகுதிகளில் விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களில் உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்க வந்தாலும் மழை பெய்து வருவதால் வியாபாரம் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையோர வியாபாரிகள் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வியாபாரம் இல்லாத நிலையில் சோகத்துடன் உள்ளனர்.