மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, ஆய்வு!

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இன்று (09.10.2026) மதுரை மாவட்டத்தில் மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதன் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை எண் 38-இல் மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், ரூத் மேடு சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கைச் சீரமைக்கவும், வேகத்தடைகளை வலுப்படுத்தவும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் “மெதுவாகச் செல்லவும்” என்ற எச்சரிக்கைப் பலகைகளை நிறுவவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை எண் 38 மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், புதுப்பட்டி சந்திப்பில் (அலிஃப் ஹோட்டல் அருகில்) ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், அபாய எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் T-சந்திப்பு எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். சேதமடைந்துள்ள உலோகத் தடுப்புகளை மாற்றி அமைக்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்கான தடுப்புக் கம்பிகள் (PCR) அமைக்கவும், ஓய்வுப் பகுதி குறித்த எச்சரிக்கைப் பலகை நிறுவவும் உத்தரவிட்டார். மேலும், சாலையோரங்களில் அலிஃப் ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ளவும், சாலையோர மரக்கிளைகளை அகற்றி வாகன ஓட்டிகளுக்குத் தெளிவான பார்வை கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை எண் 38 மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், வெள்ளமலைப்பட்டி பகுதியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், விபத்து ஏற்படும் இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் மினி மாஸ்ட் விளக்கு அமைக்கவும், அனுமதியற்ற சாலைத் திறப்புகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்சரிக்கைப் பலகைகள்

தவறான திசையில் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளைக் கட்டுப்படுத்த எதிர்திசை எச்சரிக்கைப் பலகைகள் அமைப்பதுடன், விதிமீறி வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை எண் 38-ல், மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், வளைச்சேரிபட்டி பகுதியில் சாலைப் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் அபாய எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கவும், சேதமடைந்த உலோகத் தடுப்புகள் (Metal Beam Crash Barriers) மற்றும் சாலை மையத் தடுப்புகளைச் சீரமைக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-ல், மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், பாண்டாங்குடி பகுதியில் சாலைப் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வளைவுகளுக்கு முன்பாக அதிர்வுப் பட்டைகள் (Rumbling Strips) அமைத்தல், அனுமதியற்ற இருசக்கர வாகனக் குறுக்குப் பாதைகளைத் தடுத்தல், செயல்படாத எச்சரிக்கை மின்விளக்குகளைச் சீரமைத்தல் மற்றும் சேதமடைந்த உலோகத் தடுப்புகளை (Metal Beam Crash Barriers) மாற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, அறிவுறுத்தினார்.