மதுரை த.வெ.க., நிர்வாகி திருமண நிகழ்வில் மணப்பெண் திடீரென மயங்கியதில் பரபரப்பு ஏற்பட்டது !

1 month ago 7
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி அரசியல் எதிரி என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார்.

த.வெ.க., நிர்வாகியின் இல்ல திருமணவிழா

மதுரையில் உள்ள விஜயின் தீவிர ஆதரவாளர் முனீஸ் பாண்டியர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...,"தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழக முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால்  பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தமிழகக் வெற்றிக் கழகம் பிடிக்கும். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்லவில்லை சமூக நீதி அடிப்படையில் செயல்படும் தவெக சொல்லி இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தேமுதிக சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.

திருமாவளவன் கருத்தை மறுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழக வெற்றி கழகத்திலிருந்து அழைத்து விடுக்கப்படவில்லை என திருமாவளவன் கருத்தை மறுத்தார். கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் எடுப்பார்.  தமிழ்நாடு 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான். திமுக பிப்ரவரி 22ஆம் தேதி தான் தேர்தல் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தெரிவித்தது ஆனால் காலை பிடித்து அவசரமாக தேமுதிக உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் திமுகவிற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. ஆளும் திமுகவிற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு  நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.

கொள்கை எதிரி அரசியல் எதிரி என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி அரசியல் எதிரி என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகம் படம் நிறுத்தம், சிபிஐ விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பஜகவுடன் கூட்டணியில்லை என அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது விரைவில் அது அறிவிக்கப்படும்", எனக் கூறினார்.

மதுரை தவெக நிர்வாகி திருமணத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்!

செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திருமண நிகழ்வில் நிர்வாகிக்கு சால்வை அணிவித்தபோது, அருகில் இருந்த மணமகள் திடீரென மயங்கி விழ, மொய் கவரை மணமகனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் அருண்ராஜ்.

Read Entire Article