மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கும் இஸ்லாமியர் !

1 month ago 6
ARTICLE AD

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நேற்று சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தோரோட்டத்தை காண்பதற்காக மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

பசியையும் போக்கும் வகையில் மாசி வீதிகளில் ஏராளமானோர் உணவுகளை கொடுத்தனர்.

இந்நிலையில் பக்தர்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் மாசி வீதிகளில் ஏராளமானோர் உணவுகளை கொடுத்தனர். சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட உணவுகளையும், நீர் மற்றும் மோர், ரோஸ்மில்க் என பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு பக்தர்கள் வழங்கினர். இதில் மதுரை மேலமாசி வீதி பகுதியில் செயல்படும் தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ் அசோசியேஷன் சார்பில் அதன் நிர்வாகியான சலீம் முகமது 30 வருடங்களாக பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கி வருகிறார். சித்திரைத் திருவிழா மதங்களை கடந்த சமூக நல்லிணக்க திருவிழா எனவும் தெரிவித்தார்.

Read Entire Article