மதுரை கள்ளழகர் கோயிலில் 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் தகவல் !

1 week ago 4
ARTICLE AD
<p>உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெறும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ராமானுஜர் ஜீயர் மடத்திற்கு தகுதியான புதிய ஜீயரை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு</p> <p><strong>ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு</strong></p> <p>மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சத்யநாராயணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு...," அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் ஜீயர் மடம், ஸ்ரீ ராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜீயர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே நீடித்து வருகிறது. 1927ம் ஆண்டின் இந்து சமய அறநிலையச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில், 'ஸ்ரீ பட்டாபிராம ராமானுஜ ஜீயர் சுவாமிகள்' இக்கோயிலின் ஜீயராகப் பணியாற்றியதற்கான வரலாற்று ஆவணப் பதிவுகள் உள்ளன. மேலும், கோயிலில் ஸ்ரீ ராமானுஜருக்கான சன்னதியும் இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருகிறது. கோயிலின் ஆசாரங்கள், பாரம்பரிய சமய வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் திருவிழாக்களை நெறிப்படுத்துவதில் ஜீயரின் பங்கு இன்றியமையாதது. அறநிலையத்துறை சட்டம் பிரிவு 63-ன் கீழ், பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டரீதியான கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. இருப்பினும், இந்தத் தொடர் காலிப் பணியிடத்தை நிரப்ப நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயிலின் தினசரி ஆகம வழிபாடுகள் மற்றும் மரபுகள் எவ்வித தடையுமின்றி தொடர ஜீயர் நியமனம் உடனடியாகத் தேவைப்படுகிறது. எனவே, அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ராமானுஜர் ஜீயர் மடத்திற்கு தகுதியான புதிய ஜீயரை நியமிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அழகர் கோயிலுக்கு ஜீயர் இருந்தாரா? இல்லையா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அரசுத்தரப்பில் அழகர் கோயிலுக்கு 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. &nbsp;இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.</p>
Read Entire Article