மதுரை ஆட்டோ டிரைவரின் அதிரடி: பெண்களுக்கு இலவசம், அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு கட்டணம்!

1 week ago 4
ARTICLE AD

ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரிக்கு அழைப்பு விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

தமிழக வெற்றிப் பயண திட்டம்

வெற்றிப்பயண திட்டத்தால் பெரும்பாலான பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதால், தங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பது இல்லை, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த ஒரு வாரமாக ஆட்டோ டிரைவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது, போராட்டங்கள் மேற்கொள்வது என இந்த திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

‘ஆட்டோ ஃப்ரீ’, ‘ஆட்டோ ஃப்ரீ’மா,

இந்நிலையில் மதுரை கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பேருந்துகளுக்காக காத்திருந்த பெண் பயணிகளிடம், ‘'மாட்டுத்தாவணி, மாட்டுத்தாவணி இருக்கிறீர்களா, ‘ஆட்டோ ஃப்ரீ’, ‘ஆட்டோ ஃப்ரீ’மா, ஏறிக் கொள்ளுங்கள், மனசு இருந்தால் காசு கொடுங்கள், ‘ஆட்டோ ஃப்ரீ’ என்று சவாரிக்கு அழைத்துச் செல்கிறார். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாட்டுத்தாவணிக்கு ஆட்டோ ப்ரீ, ஏறிக்கோ, ஏறிக்கோ...., ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு டபுள் சார்ஜ், என பொதுமக்களிடையே ஆட்டோ ஓட்டுநர் அழைப்பு விடுக்கும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்கில் ஆதரவும், எதிர்ப்பு கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவு செய்தனர்.  ஒரு தரப்பினர் தங்களது எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்தி வரும் ஆட்டோ ஓட்டுவதற்கு வாழ்த்துக்கள் ‘தரமான சம்பவம்’. எனவும் மற்றொரு தரப்பினர், ‘வீம்புக்கு செய்கிறார்’, போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Read Entire Article