"மத உணர்வுகளை புண்படுத்த கூடாது" எமர்ஜென்சி திரைப்படத்தால் தொடர் சர்ச்சை.. மத்திய அரசு பரபர!

1 year ago 7
ARTICLE AD

நாடு முழுவதும் கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு, மார்ச் 21ஆம் தேதி வரை அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து “எமர்ஜென்சி” என்ற படத்தை எடுத்துள்ளார் கங்கனா ரனாவத்.

இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அச்சு அசலாக அவரது தோற்றம் இந்திரா காந்தியைப் பார்ப்பது போலவே உள்ளதாக பலரும் தெரிவித்தனர்.  இப்படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை எழுதியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய எமர்ஜென்சி திரைப்படம்:

முதலில் இப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என மாற்றப்பட்டது. ஆனால், சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை.

இதற்கிடையில் மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியில் கங்கனா ரனாவத் எம்.பி.யாக தேர்வானார். எம்.பி.,யான கையோடு தனது எமர்ஜென்சி படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் கங்கனா இறங்கினார்.

அதன்படி இப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், இந்திய திரைப்பட தணிக்கை குழு வாரியத்திடம் இருந்து சான்றிதழ் வழங்காமலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மத்திய அரசு சொல்வது என்ன?

எனவே, “எமர்ஜென்சி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை திரைப்பட தணிக்கை குழு வாரியம் ஒத்திவைத்தது.  இந்த நிலையில், திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது ஏன் என மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்கக்கூடாது என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "திரைப்படம் குறித்து சில மத அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. மத உணர்வுகளை புண்படுத்த கூடாது. படத்தில் சில உணர்ச்சிகரமான உள்ளடக்கம் உள்ளது. அரசு அதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது" என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article