மக்கள் நலத்திட்டத்தில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டம்..!

4 months ago 5
ARTICLE AD

தமிழக மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களில் அரசியல் செய்வது வருத்தம் அளிப்பதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திட்டத்தின் பெயர் முக்கியமா? அல்லது மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல் சிலர் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 488 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மாணவர்களை வழிநடத்தும் முறைகள், பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கற்றல்-கற்பித்தல் முறைகள் மற்றும் அடைவுத் தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

அமைச்சர் அளித்த பேட்டி

அதனைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினார்.

உடற்கல்வி பாடத்திட்டம்

உடற்கல்விக்கான புதிய பாடத்திட்டம் குறித்த புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி முடிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு, மன ஆரோக்கியம் மற்றும் உடல் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படும். இந்த கல்வியாண்டிலேயே இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கலைஞர் பல்கலைக்கழகம்

கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தமிழக ஆளுநர், எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. கண்டிப்பாக நீதிமன்றம் தமிழக அரசுக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்

"உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் பெயருக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தமிழக மக்களுக்காகத் திட்டங்களைக் கொண்டு வருகிறோம். அதில் யார் பெயர் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல் சிலர் அரசியல் செய்கிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அம்மா உணவகம் என்ற பெயரில்தான் தொடர்ந்து அதனை செயல்படுத்தி வருகிறோம். மக்களிடம் இந்தத் திட்டம் நன்றாக சென்றடைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார்.

முதன்மை கல்வி அலுவலர் பணியிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல மாதங்களாக முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதிக அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அடுத்து பணி உயர்வுப் பட்டியல் வர உள்ளது. அப்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கண்டிப்பாக முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்படுவார்,” என்று அமைச்சர் உறுதியளித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இணை இயக்குநர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் அன்புமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் குமரவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read Entire Article