மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!

3 weeks ago 3
ARTICLE AD

டேட்டிங் ஆப் மூலம் பெண் ஆசை காட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விதவிதமான குற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரே மாதிரியான குற்றங்களில் ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். என்னதான் அரசு, காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பேராசை, உணர்ச்சியை தூண்டும் பேச்சு போன்றவற்றால் மக்கள் எளிதில் ஏமாந்து விடுவது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

அப்படியாக சமூக வலைத்தளம் அல்லது ரெட்டிட் போன்ற செயலி மூலம் டேட்டிங் மோசடி தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், ஒரு வங்கி அதிகாரி, ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியர், ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோர் இந்த மோசடியில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து சைபர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இந்த 3 நபர்களும் கிட்டதட்ட ரூ.8 கோடி அளவில் பணத்தை இழந்துள்ளனர்.

டேட்டிங் செயலிகள் பொதுவாக காதல் மோசடிகளுக்கு பயன்படும் என சொல்லப்பட்டால் இது வித்தியாசமாக முதலீட்டு மோசடி வழிவகுக்கும் வகையில் உள்ளது. இதற்கு ஷா ஜு பான் என சீன மொழியில் பெயர் வைத்துள்ளனர். அதாவது பன்றியை வெட்டுவதற்கு முன்னர் அதை கொழுக்க வைப்பது என்பது இந்த பெயரின் அர்த்தமாகும். சென்னையைச் சேர்ந்த அந்த வங்கி அதிகாரி ரூ.4.5 கோடியை அசால்ட்டாக இழந்துள்ளார். அவர் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் லவ்லி என்ற டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணிடம் பேசினார்.

அந்த பெண் தான் லண்டனில் இருந்து பேசுவதாக சொல்லியுள்ளார். இருவரும் வாட்ஸ்அப்பில் உரையாடியுள்ளனர். லண்டன் அழைப்பு எண் கொண்டு அந்த செல்போன் இருந்துள்ளதால் இந்த வங்கி அதிகாரியும் நம்பி பேசியுள்ளார். ஒரு வாரம் காலம் அடிக்கடி போனில் நலம் விசாரிப்பது தொடங்கி அந்த அதிகாரியின் விருப்பம் வரை அனைத்தையும் எதிரில் இருப்பவர்  கேட்டு தெரிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்முனையில் பேசிய பெண், தன்னுடைய டேட்டிங் செயலில் சுய விவரங்கள், புகைப்படம், பெயர் ஆகியவை போலி என்றும், தன்னுடைய உண்மையான பெயர் இதுதான் என்றும், தன்னுடைய புகைப்படம் எனவும் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இதைக் கண்டும் சந்தேகம் கொள்ளாத அந்த வங்கி அதிகாரி நம்பியுள்ளார். இருவரும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை பேசியுள்ளனர். அப்பெண் தனக்கு பெற்றோர் யாரும் இல்லை. மாமா வளர்ப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

3வது வாரத்தில் தன் மாமா ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தகம் மேற்கொள்பவர் என ஒருவரை சொல்லி அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் வர்த்தம் பற்றி பேச, வங்கி அதிகாரியிடம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டியுள்ளார்.

ஒரு கிரிப்டோ நிறுவனத்தில் பதிவு செய்ய வைத்து முதலீடு செய்ய வலியுறுத்தினார். முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து லாபம் வருவதை காட்டியுள்ளனர். அதன்பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முதலீடு செய்தால் லாபத்தில் 15 சதவிகிதம் கமிஷனாக வழங்கப்படும் என கூறியுள்ளனர். இப்படியாக அந்த வங்கி அதிகாரி தன் பணிகாலத்தில் ரூ.10.5 கோடிக்கும் அதிகமான சொத்துகள் வைத்திருந்தார். இதனால் அந்த மாமா சொன்னபடி முதலீடு செய்தார்.

லாபத்தை எடுக்க முயன்றபோது வர்த்தக விதிகளை மீறியதால் அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. கணக்கை திறக்க ரூ.2.6 கோடி செலுத்த வெனெடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்துக்காக தனது சேமிப்பு, உறவினர்களிடம் கடன், சொத்துகள் அடமானம் என அனைத்தையும் செய்துள்ளார். இப்படியான நிலையில் ஜூன் மாத இறுதியில் இந்த வர்த்தக தளத்துடன் தொடர்பு நின்று போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வங்கி அதிகாரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையை நாடியபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read Entire Article