போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே இந்தத் துணிச்சலா? கரூரை உலுக்கிய 32 சவரன் நகை கொள்ளை

1 week ago 4
ARTICLE AD

கரூர்: காவல் நிலையம் அருகே ஆசிரியர் வீட்டில் 32 சவரன் நகைகள், அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், திருச்சி செல்லும் சாலையில் உள்ள காவிரி நகர் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் தங்க நகைகள் மற்றும் அமெரிக்க டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் - திருச்சி செல்லும் சாலையில் உள்ள காவிரி நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 19ஆம் தேதி தனது உறவினரைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் 400 அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டிற்கு எதிரே உள்ள தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தாந்தோன்றிமலை காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article