போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

5 months ago 4
ARTICLE AD

விசாரனைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் எஸ்பி உத்தரவு.

மடப்புரம் கோயிலில் சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அருகே உள்ளது மடப்புரம். இங்கு பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில்

இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான அஜித்குமார் (27) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) தனது மகள் நிகிதாவுடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27) சக்கர நாற்காலி எடுத்து வந்து கொடுத்தார். அப்போது காரை ‘பார்க்கிங்’ செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.

காவலாளி உயிரிழப்பு

இதையடுத்து காரை அஜித்குமார் வேறொரு நபர் மூலம் ‘பார்க்கிங்’ செய்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, அங்கு பையில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாரிடம் நிகிதா புகார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அஜித்குமாரிடம் காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை நேற்று தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே உறவினர்கள் காவல்நிலையத்தில் குவிந்தனர்.

உண்மையை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்தார்கள்

இது குறித்து உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி கூறுகையில்...," கோயிலில் எனது அண்ணன் வேலையும் போது காரில் வந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவியுள்ளான். இந்நிலையில் நகை காணவில்லை எனக் கூறி எனது அண்ணன் உட்பட 5 பேரை அடித்து விசாரணை செய்தனர். இந்த சூழலில் என் அண்ணன் உடலில் அடி தாங்கமுடியாமல் உயிரை விட்டுவிட்டான். இந்த பிரச்னையில் என்னை கூட அடித்து விசாரணை செய்தனர். என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் நீதி கிடைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

காவலர்கள் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்கிற இளைஞர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழப்பு. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள்
6 பேர் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டதுடன் வெளிப்படையான விசாரனை நடத்தவும் உத்தரவு.

Read Entire Article