போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – கோவையில் வடமாநில இளைஞர் கைது

4 weeks ago 4
ARTICLE AD

ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரை கோவை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டது.  கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 கிலோ கஞ்சா பறிமுதல்

​கோவை, போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போத்தனூர் ரயில் நிலையத்தில் போலீசார் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெரிய பைகளுடன் நின்று இருந்த ஒருவரைப் பிடித்துச் சோதனை செய்தனர்.

அந்தச் சோதனையில், 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதை அடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், விசாரணை செய்தனர் . விசாரணையில்  பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமநாத் அர்ஜில் என்பது தெரியவந்தது. இவர் ஒடிசாவில் இருந்து சட்ட விரோதமாகக் கஞ்சாவை கொண்டு வந்து அதனை ரயில் மூலம் கேரளாவுக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. ​இது தொடர்பாகப் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article