பொய் பிரச்சாரம் செய்த பாகிஸ்தான்... மறுப்பு தெரிவித்த சீனா..

7 months ago 6
ARTICLE AD

இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு என்ற பாகிஸ்தானின் பிரச்சாரத்திற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ

பரபரப்பான சூழலுக்கு இடையே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி மூலம் பேச்சியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாங் யீ தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

5 மணிக்கு போர் நிறுத்தம் 8 மணிக்கு மீண்டும் போர்

பாகிஸ்தான் இந்தியா ராணுவத்தினர் இடையே கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் போர் முடிவுக்கு வருவதாகவும் அதற்கு இரு நாடுகளும் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இருநாடுகளும் அதனை உறுதி செய்தது.

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் மீண்டும் திடீரென்று ஜம்மு, காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய பாதுகாப்பு துறையினர் அவற்றை தாக்கி அழித்தன. போர் நிறுத்தம் அறிவித்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறிய சம்பவம் பெரும் கடும் கண்டனத்தை பெற்றது.

இந்தியாவுடன் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர்

இந்த சூழலில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தோவல் தெரிவித்ததாகவும், இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதையும், போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்றும், எந்த தரப்பிற்கும் அதில் நன்மை இல்லை என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலை கண்டித்த சீனா

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பும் போராட விரும்பவில்லை, அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநிறுத்த விரும்புகிறார்கள் என அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பஹல்காம் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது என்றும் கூறினார். தற்போதைய சர்வதேச சூழல் கடுமையாக மற்றும் சிக்கலானதாக உள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது மிக முக்கியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் சீனாவின் அண்டை நாடுகள், அவை இடம்பெயர முடியாத அண்டை நாடுகள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் கூற்றுக்கு சீனா பாராட்டு

மேலும், போர் என்பது இந்தியாவின் விருப்பம் அல்ல என்று இந்தியா கூறியதற்கு சீனா பாராட்டுத் தெரிவித்தது. இரு நாடுகளும் அமைதி, தெளிவு மற்றும் முறையான பேச்சுவார்த்தையின் மூலம் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றும், மாறாக நீடித்த மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியதாக சீன வெளி விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா மறுப்பு

இந்த சூழலில் பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டு சீனா தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. மேலும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு என்ற தகவலுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article