பொங்கல் பரிசு ₹5000-ஆ? அமைச்சர் காந்தி பதில்! ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு உறுதி!

3 months ago 8
ARTICLE AD

பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளது, முதலமைச்சர் அறிவித்தவுடன் கொடுக்கப்பட்டு ஜனவரி 10 தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தகவல்.

காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழிற்சாலைகளின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்தனர்.

பொங்கலுக்கு பரிசு தொகை உள்ளதா ?

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது: "தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. தமிழக முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன், அதன் விநியோகம் உடனடியாகத் தொடங்கும். வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும்.

தொடர்ந்து செய்தியாளர்கள், "பொங்கல் பரிசுத் தொகையாக ₹5000 வழங்கப்படுமா?" என்று எழுப்பிய கேள்விக்கு, "அதெல்லாம் பிறகுதான் (பார்த்துக்கொள்ளலாம்)" என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

Read Entire Article