போதையின் பாதையில்... கடலுக்குள் தத்தளித்த கார்.. கடலூரில் நடந்த காமெடி இதுதான்!

3 months ago 5
ARTICLE AD

போதை தலைக்கு ஏறினால் பல தருணங்களில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் கோமாளித்தனங்களிலும் ஆபத்தான விஷப்பரீட்சைகளிலும் இறங்குவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலில் மிதந்த கார்:

அதாவது, கடலூர் முதுநகர் அருகே அமைந்துள்ளது சொத்திக்குப்பம். கடலோர பகுதியான இங்கிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். வழக்கம்போல அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடற்கரை ஓரத்தில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கடலில் கார் ஒன்று மிதந்து கொண்டு தத்தளிப்பதையும், உள்ளே ஆட்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உள்ளே சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர். பின்னர், டிராக்டர் மூலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த காரையும் மீட்டனர்.

கடலுக்குச் சென்றது எப்படி?

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில்  கார் எப்படி கடலுக்குச் சென்றது என்பதில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. காரில் இருந்த ஆண்களும், பெண்களும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வந்துள்ளனர்.

மொத்தம் 5 பேரில் 2 பெண்கள், 3 ஆண்கள் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மதுபோதையில் இருந்துள்ளனர். போதையில் இருந்தவர்களில் ஒருவர் இந்த கார் கடற்கரை மணலிலும் நன்றாகவே ஓடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கடற்கரை மணலில் காரை ஓட்டியுள்ளனர்.

போதை படுத்தும் பாடு:

பின்னர், ஒரு நபர் இந்த கார் கடற்கரை மணல் மட்டுமின்றி கடல் நீரிலும் ஓடும் என்று கூறியுள்ளார். இதனால், காரில் இருந்த போதை ஆசாமிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எதுக்கு வாதம்? தண்ணீரில் காரை ஓட்டிப்பார்க்கலாம் என்று ஓட்டியுள்ளனர்.

அப்போது, கடலில் சிறிது தூரம் கார் சென்றுள்ளது. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எஞ்ஜின் ஆஃப் ஆகியுள்ளது. பின்னர், காரை மீண்டும் கரைக்கு எடுக்க முடியவில்லை. இதனால், காரில் இருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறியுள்ளனர். இதையடுத்தே, மீனவர்கள் அவர்களைப் பார்த்து மீட்டுள்ளனர்.

மதுபோதையில் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பல சமயங்களில் மது போதையில் இதுபோன்ற விபரீத மற்றும் கோமாளித்தனமான செயல்களில் சிலர் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

Read Entire Article