மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதாவது, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் வசிக்கும் தம்பதியினருக்கு இரட்டை குழந்தை உள்ளது. இதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குறையுள்ள குழந்தை. மூளை வளர்ச்சி பாதிப்புள்ள குழந்தையை பெற்றோர்கள் பராமரித்து வருகின்றனர். நன்றாக உள்ள குழந்தையை அந்த குழந்தையின் தந்தை வழி தாய் வளர்த்து வருகிறார்.

சொத்து தகராறு:

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பேரனை பாட்டி பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த குழந்தையின் தந்தைக்கும் அவரது தாய்க்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மகனை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அந்த தந்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால், பேரனை தனது மகனிடம் ஒப்படைக்க பாட்டி ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தனது மகனை தனது தாயிடம் இருந்து பிரித்து தன்னிடம் வழங்குமாறு அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

பேரனைக் கேட்ட பாட்டி:

அப்போது, பேரன் தன்னிடமே வளர வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, குழந்தை பிறந்ததில் இருந்தே என்னுடன் மட்டுமே வளர்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு உள்ளது. அதற்கு என்னென்ன தேவை என்பது எனக்கு மட்டுமே தெரியும். குழந்தையை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாட்டிக்கு உரிமை கிடையாது:

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பேரக்குழந்தையுடன் பாட்டி பாசத்தை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதுவே அந்த குழந்தையை வளர்க்கும் உரிமைய பாட்டிக்கு வழங்கிவிடாது. குழந்தையை வளர்க்கும் உரிமை பெற்றோர்களுக்கு எப்போதும் உண்டு. குழந்தையை வளர்க்கும் உரிமை பெற்றோரை காட்டிலும் பாட்டிக்கு கிடையாது.

இந்த சொத்துப் பிரச்சினை காரணமாக, பெற்றோரின் சட்டப்பூர்வ உரிமையை பறிக்க இயலாது. இந்த வழக்கில் பாட்டிக்கு தற்போது 74 வயதாகும் சூழலில், பேரக்குழந்தையை பராமரிக்க சட்டத்தில் இடமில்லை. வளர்ப்பது மற்றும் பராமரிப்பதில் குழந்தையின் நலனே முக்கியம்.

ஒப்படைக்க வேண்டும்:

இதனால், வரும் 2 வாரங்களுக்குள் குழந்தையை அதன் பெற்றோரிடம் பாட்டி ஒப்படைக்க வேண்டும். குழந்தையை அடிக்கடி வந்து பார்ப்பதற்கு பாட்டிக்கு பெற்றோர்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.