தமிழ்நாடு அரசு ஏன்? எதற்கு? எப்படி? என்ற பெயரில் விழிப்புணர்வு போட்டி நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்பட உள்ளது. என்னென்ன தலைப்புகளின் என்னென்ன? போட்டிகள் என்பதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதை கீழே காணலாம்.

பேச்சுப்போட்டி:

பேச்சுப்போட்டிக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இந்தியாவின் மதச்சார்பின்மையின் முக்கியத்துவம்

2. அறிவியல் மனப்பான்மை ஏன் அவசியம்?

3. வெறுப்பு பேச்சை விட்டொழிப்போம்.

4. சமூகநீதி காக்க இட ஒதுக்கீடு

5. நான் கண்ட போலிச்செய்தி

கவிதைப்போட்டி:

கவிதைப்போட்டிக்கான தலைப்புகள்:

1. மெய்ப்பொருள் காண்பது அறிவு

2. பிறப்பால் அனைவரும் சமம்

3. பண்படுத்தும் பகுத்தறிவு

ஏன்? எதற்கு? எப்படி? விழிப்புணர்வுப் போட்டிகள்@CMOTamilnadu @mkstalin @Udhaystalin@mp_saminathan @tnfactcheck#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/VJtKcW5M3L

— TN DIPR (@TNDIPRNEWS) October 10, 2025

கட்டுரைப் போட்டி:

கட்டுரைப்போட்டிக்கான தலைப்புகள்:

1. அனைவரும் சமம்

2. மதச்சார்பற்ற இந்தியா

3. போலிச்செய்தியை புறக்கணிப்போம்

4. சமூகநீதியில் முன்னோடியாய் விளங்கும் தமிழ்நாடு

5. இட ஒதுக்கீடு - தமிழ்நாடு முன்னத்தி ஏர்

6. பெண்ணியம் பேசுவோம் ஆண்களே

வாசகம் எழுதும் போட்டி:

போலிச்செய்தி மற்றும் வெறுப்பு பேச்சுக்கு எதிராகவும், சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப்பான்மைை ஊக்குவிக்கும் விதமாகவும் வாசகங்களை எழுத வேண்டும்.

புகைப்பட போட்டி:

புகைப்பட போட்டி தலைப்புகள்:

1. கருத்துச் சுதந்திரமும், வெறுப்பு பேச்சும்

2. சமூகநீதி போற்றும் தமிழ் சமூகம்

3. பகுத்தறிவும் அறிவியலும் தலைமுறை மாற்றத்தின் அடித்தளம்

குறும்பட போட்டி:

1. கருத்துச் சுதந்திரமும், வெறுப்பு பேச்சும்

2. சமூக நீதிப் போற்றும் தமிழ்ச் சமூகம்

3. பகுத்தறிவும் அறிவியலும் தலைமுறை மாற்றத்தின் அடித்தளம்

மேலே கண்ட தலைப்புகளின் குறும்பட போட்டி நடக்கும்.

ஓவியப்போட்டி:

1. அனைவரும் சமம்

2. மனிதம் போற்றுவோம்

3. அன்பை அந்நியமாக்கும் வெறுப்பு பேச்சு

இந்த தலைப்புகளில் ஓவியப் போட்டி நடக்கிறது

மீம் தயாரித்தல் போட்டி:

1. போலிச் செய்திகளும், செயற்கை நுண்ணறிவும்

2. அறிவியல் மனப்பான்மை

3. தகவல் சரிபார்ப்பு

4. மதச்சார்பின்மை

5. சமத்துவ இந்தியா

இந்த தலைப்புகளில் மீம்கள் அனுப்ப வேண்டும்.

இந்த தலைப்புகளில் உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் இந்த மாதம் 31ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு செய்தித் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வ தளத்தில் தொடர்பு கொள்ளவும். இந்த போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு தடை கிடையாது.