பெற்றோர்களே விடுமுறையில் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்..!

7 months ago 9
ARTICLE AD

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே வாத்து மேய்க்க சென்ற சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாத்து மேய்க்க சென்ற சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள எடையாரை சேர்ந்தவர் அறிவுநிதி. இவர் தனது சித்தியின் 4 வயது மகன் ருத்ரேஷ்வரனை வளர்த்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் அறிவுநிதியின் உறவினரான கண்மனி – ராஜேந்திரனின் 11 வயது மகள் ஜெயலட்சுமி அறிவுநிதியின் வீட்டிற்கு வந்தார். இந்த சூழலில், அறிவுநிதி எடையாரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அடுத்த கூவாகத்திற்கு வாத்து மேய்பதற்காக புறப்பட்டார். அப்போது, சிறுவன் ருத்ரேஷ்வரன் மற்றும் சிறுமி ஜெயலட்சுமி ஆகிய இருவரும் வாய்த்து மேய்க்க வருவதாக கூறி அறிவுநிதியுடன் சென்றனர்.

எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சிறுவன், சிறுமி

வாத்து மேய்த்து கொண்டிருந்த போது சிறுவனும், சிறுமியும் கூவாகத்தில் உள்ள குட்டையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கினர். இதனையறிந்த அருள்நிதி குட்டையில் மூழ்கிய இருவரையும் மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குசிறுமி சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவன், சிறுமியின் உடல்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டுச் செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.  அதிகபட்ச சூரிய வெப்ப நேரத்தில் அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். தனிமை உணர்வுகளை தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். டி.வி. மற்றும் செல்போன் ஆகியவற்றை பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பதை  உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழ வகைகளை கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்து சென்று சுமார் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும். மொழி, இசை, நடனம் மற்றும் ஒவியம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் என கூறப்படுகிறது.

Read Entire Article