பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது திமுக - ராமதாஸ் எதற்காக அப்படி சொன்னார்?

1 year ago 7
ARTICLE AD

பல்வேறு கோயில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவைப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது,

பல்வேறு கோயில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுவதாகவும், அவர்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவைப்பதும், அதை ஊக்குவிப்பதும் கண்டிக்கதக்கது. நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 அர்ச்சகர்களை அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் அவமரியாதை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரிகளும் பரம்பரை அர்ச்சர்களுடன் இணைந்து அவமானப்படுத்தப்படுவதாக கூறுகின்றனர்.

அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் 2014ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தை துவக்கிய முதல்வர் பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள் நீக்கப்பட்டது என்றார். ஆனால் நடைமுறை வேறு. நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் கருவறையில் அர்ச்சனை செய்யலாம் என அறிவித்து இருக்கலாம். இதுகுறித்த புகார்மீது நடவடிக்கை இல்லை. இதற்கு காரணம் பரம்பரை அர்ச்சகரை கண்டு அஞ்சுவதுதான். இதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது திமுக அரசு.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படுமா என்ற கேள்வி உள்துறை அமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்று கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் வரவேற்கதக்கது.

தமிழகத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. 1972ம் ஆண்டு முந்தைய தலைமுறை மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர

மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது. கஞ்சா வணிகம் குறித்த அனைத்து உண்மைகளும் அரசுக்கு தெரியும் என்றாலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்யோகம் தேவையா?

டிஎன்பிஎஸ்சி குருப் 4 போட்டித்தேர்வில் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் காலி பணியிடங்கள் 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை. தமிழகத்தில் 6 லட்சம் பணியிடங்களில் 2 லட்சம் பணியிடங்கள் குருப் 4 வகையை சேர்ந்தவையாகும். எனவே குருப் 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்தவேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அத்தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல. மகளிர் உரிமை தொகை வழங்க இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் 6 சதவீத சொத்துவரி உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . ஏற்கனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி உயர்த்தப்பட்டால் பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்களை, சந்தேகங்களை மத்திய அரசு போக்கவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து பரிசீலிக்கவேண்டும். திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு உத்தமர் ஓமந்தூரார் பெயரை வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இதனை தொடர்ந்து கௌரவத்தலைவர் ஜி கே மணி கூறியது,

தமிழகத்தில் மானாவரி பயிர் வறட்சியில் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி 100 டி எம் சி தண்ணீர் வீணாய் கடலில் கலந்தது. ஒரு சொட்டு தண்ணீர் வீணாகாமல் தடுப்பணை கட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வன்னியர் சங்கத்தலைவர் பு.தா அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read Entire Article