பெரியகுளத்தில் வெறித்தனமா நடக்கும் பேஸ்கட்பால் மேட்ச்..யார் ஜெய்ச்சா? முழு விபரம் இதோ

7 months ago 5
ARTICLE AD

பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்  அமரர் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 64ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதல் மூன்று போட்டிகளில் கோவை ராஜலட்சுமி பள்ளி கூடைப்பந்து அணி, மதுரை பெகாஸங் கூடைப்பந்து  அணி, சென்னை ஜெயராமன் கூடை பந்து அணியும் வெற்றி பெற்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப், பிடி சிதம்பர சூர்ய நாராயணன் நினைவு சுழற் கோப்பைகாண 64வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி பெரியகுளம் தென்கரையில் உள்ள நினைவரங்கத்தில் மே 15 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 21ம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் அகில இந்திய கூடைப் பந்தாட்டப் போட்டியில் இந்தியா கப்பல் இந்தியா கப்பற்படை அணி,கேரள மாநில மின்வாரிய அணி, கேரளா காவல்துறை அணியும், விளையாட்டு விடுதி சென்னை அணி, டெல்லி மாநில கூடைப்பந்து அணி, கஸ்டம்ஸ் அணி, இந்தியன் வங்கி அணி சென்னை, விமானப்படை புது டெல்லி அணி உள்ளிட்ட 22 அணி கள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில்  பகல் மற்றும் இரவு மின் ஒளி போட்டிகளாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50000 மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாவது பரிசாக ரூபாய் 40 ஆயிரம்  மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாவது பரிசாக 30000 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும்,  நான்காவது பரிசாக ரூபாய் 20000 யும் ,போட்டி முடிவில் சிறந்த ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் கோவை ராஜலட்சுமி பள்ளி கூடை பந்து அணியும் மோதியதில் 85க்கு 38 என்ற புள்ளியின் அடிப்படையில் கோவை ராஜலட்சுமி பள்ளி கூடை பந்து அணியும் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மதுரை பெகாஸங் கூடைப்பந்து அணியும் தேனி எல் எஸ் மில் கூடைப்பந்து அணியும் அணியும் மோதியதில்  84 க்கு 73 என்ற புள்ளி அடிப்படையில் மதுரை பெகாஸங் கூடைப்பந்து  அணி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் சென்னை ஜெயராமன் கூடைப்பந்து கழக அணியும் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் கிரீன் அணியும் மோதியதில் 94க்கு 53 என்ற புள்ளி அடிப்படையில் சென்னை ஜெயராமன் கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.

இன்று இரண்டாவது நாள் நடைபெற்று வரும் இப்போட்டியில் சென்னை, கோவை, மதுரை அணிகள் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது நாளில் நடைபெற்ற முதல் போட்டியில்  மதுரை ரேஸ்கோர்ஸ் கூடைப்பந்தாட்ட கழக அணிக்கும், கோவை ராஜலட்சுமி கூடை பந்தாட்ட கழக அணிக்கும், இடையே நடைபெற்ற போட்டியில் கோவை அணி 85 க்கு 46 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.  இரண்டாவதாக கரூர் டெக் சிட்டி  அணிக்கும்,  மதுரை பெகாசஸ் கூடை பந்தாட்ட கழக அணிக்கும்,  இடையே நடைபெற்ற போட்டியில் மதுரை பெகாசஸ் கூடைப்பந்தாட்ட கழக அணி  அணி  100 க்கு 98 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

மூன்றாவதாக  சென்னை கஸ்டம்ஸ் அணிக்கும், சென்னை வி கே ஜெயராமன் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணி  86 க்கு 72 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.  நான்காவது போட்டியாக தமிழ்நாடு காவல்துறை சென்னை அணிக்கும், சென்னை விளையாட்டு விடுதி உடைப்பந்தாட்ட அணிக்கும், இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணி 75 க்கு 58 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

Read Entire Article