பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு - சக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ம் வகுப்பு மாணவன்!

8 months ago 8
ARTICLE AD

பென்சில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சக மாணவனை 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருக்கு பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் இன்று பள்ளிக்கு வரும்போது பேக்கில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

இன்று பள்ளி ஆரம்பித்ததும் அந்த மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் அரிவாளை எடுத்து வந்த மாணவன் இன்னொரு மாணவனை மிகவும் ஆக்ரோஷமாக தாக்கினான். இதில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தலைப்பகுதி, தோள்பட்டை, முதுகு என வெட்டுக்காயங்கள் அதிகமாக விழுந்தன.

இதைப்பார்த்த ஆசிரியர்கள் தாக்குதல் நடத்திய மாணவனை தடுக்க முயன்றனர். ஆனால் அவன் ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினான். இதில் இரண்டு ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் இரண்டு ஆசிரியர்கள் என மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய மாணவனை பிடித்து கைது செய்துள்ளனர். அவர் மேல் சிறுவர்கள் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article