பெண்மையை மதிக்காதவர்களுக்குப் பதவியில் இடமில்லை - அன்புமணி ஆவேசம்

1 hour ago 1
ARTICLE AD

பெண்களை மதிக்கதெரியாத, பாதுகாப்பு வழங்காத தகுதியற்ற, கையாளாகாத, மக்கள் விரோத திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும், இவர்களுக்கு தகுதி இல்லை, இவர்கள் தொடர்ந்தால், நமது பேரப்பிள்ளைகளுக்கு போதை மாத்திரைகள், போதைகள் ஊசிகள் தாரளாமாக கிடைக்கும், ஆகையால் திமுகவை விரட்டியடிப்போம் என திருப்பத்தூரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ஞானசேகர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர், முன்னாள் அமைச்சர்,  கே.சி.வீரமணி ஆகியோரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று  திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய அவர், “குழந்தைகளுக்கு எதிராக தமிழகத்தில் அன்றாடம் பாலியல் தொல்லை நடக்கிறது, இது நம் குழந்தைக்கும் நடக்கும்,
பெண்களை மதிக்க தெரியாத, பாதுகாப்பு வழங்காத, தகுதியற்ற திமுக  ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும். இவர்களுக்கு  ஆட்சி செய்ய தகுதி இல்லை, மோடி அரசு தொகுதி மறுவரையறை  சட்ட மோசோதாவை தாக்கல் செய்தார்கள், அதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமசோதா, உள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால், பெண்கள் அதிகம் நாடாளுமன்றம் செல்வார்கள், இதை எதிர்த்து, சட்ட நகலை கொளுத்திய ஸ்டாலினுக்கு ஒரு பெண்களும் வாக்களிக்க கூடாது, அவர் தங்கை மட்டும் தான் எம்.பி ஆக வேண்டும், எவ்வளவு வன்மமான புத்தி அவருக்கு. மேலும் ஸ்டாலினுக்கு எதை சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என தெரியவில்லை, மோடி பொய் சொல்கிறார் என பேசி வருகிறார்.

ஸ்டாலின் சட்டநகலை எரித்தது தேச துரோக செயல் அதற்காக அவரை கைது செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு முன்பு திருப்பத்தூருக்கு 21 வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை, மருத்துவ கல்லூரி, தொழிற்பேட்டை கொண்டு மூலிகை பண்ணை கொண்டு வரும் என்று, கூறினார், ஒன்றும் செய்யவில்லை. மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது எடப்பாடி பழனிசாமி, அதை கெடுத்தது ஸ்டாலின்.

மேலும், திமுகவினர் வழங்கும் 8000 ரூபாயிற்கான  கூப்பன் கொடுக்க வேண்டும் என்றால் திமுகவினருக்கு  3000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். கடைசியாக  8000 ஆயிரம் ரூபாய் கூப்பனை நம்பி இருக்கிறார் ஸ்டாலின், 5 ஆண்டுகள் செய்ததை விட்டு விட்டார். தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக 5 ஆண்டுகளில், ஒரு மாவட்டத்தையும் பிரிக்கவில்லை, ஒரு மருத்துவ சீட்டையும் அதிகரிக்கவில்லை, மின்கட்டணத்தை குறைப்பேன் என கூறினார். ஆனால் மின்கட்டணம் 60% அதிகரித்துள்ளது. திமுகவினர் தான் தமிழகத்தில்  கஞ்சாவை விற்று வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தான் சமூக நீதி நிலைநாட்ட முடியும். இது எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே போட்டி. என்னையும், எடப்பாடி பழனிசாமியை கொச்சையாக பேசி வருகின்றனர் அது அவர்கள் டி.என்.ஏவில் உள்ளது, அவர்களை போல் எங்களுக்கும் பேச தெரியும்,  தோல்வி நடுகத்தில் ஸ்டாலின், வீணாபோன திராவிட மாடலையும் விற்றுவிட்டார். தயது செய்து ஓட்டு போடுங்கள், கூப்பன் தருகிறேன் என வாக்கு சேகரித்து வருகிறார், டூப்ளிகேட் கூப்பன், அது கையாளாகாத ஆட்சி, ஊழல் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி,  திமுக ஆட்சிக்கு வந்தால், நம் பெண் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு, போதை மாத்திரைகள், போதை ஊசி கிடைக்கும், ஆகையால்  திமுக ஆட்சியை விரட்டியடிப்போம் எனப் பேசினார்.

Read Entire Article