கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களுக்கு தமிழக அரசின்‌ ரூ. 50,000 மானியம்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:

''தமிழக அரசு, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழ்‌ உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு ரூ.50,000/- வீதம்‌ வழங்குகிறது. இந்தப் பெண்கள் சுய தொழில்‌ செய்து சுய மரியாதையுடன்‌ வாழ்வதற்கு ரூ.1.00 கோடி மானியம்‌ வழங்கியுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* இந்தத் திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய பின்‌வரும்‌ தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌ வாரியத்தில்‌ பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌ நலவாரியத்தில்‌ உறுப்பினர்‌ ஆவதற்கு https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பித்து உறுப்பினர்‌ ஆகலாம்‌.

* இத்திட்டத்தில்‌ வறுமைக் கோட்டிற்கு கீழ்‌ இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

* விண்ணப்பிக்கும் பெண்கள் 25 முதல்‌ 45 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்‌.

* குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.1,20,000/- க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

* ஒருவர்‌ ஒரு முறை மட்டுமே மானியம்‌ பெற தகுதியுடைவர் ஆவார்‌.

* சுய தொழில்‌ செய்வதற்கு மானியம்‌ பெற அளிக்கப்படும்‌ விண்ணப்பத்துடன்‌ பின்வரும்‌ சான்றுகள்‌ இணைக்கப்பட வேண்டும்‌.

* கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌ நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்கள்‌ என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல்‌, ஆதார்‌ அட்டை நகல்‌, தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும்‌ ஒரு சான்று.

மேற்காணும்‌ சான்றுகளுடன்‌ கைம்பெண்கள்‌ ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்க https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnwidowwelfareboard.tn.gov.in/