பெண்களிடம் அத்து மீறிய போலீஸ் ; வேடிக்கை பார்த்த ASP... வாலிபரை நாய் போல இழுத்து சென்ற கொடூரம்

11 months ago 9
ARTICLE AD

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிசம்பர் 03ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதமசிகாமணி ஆகியோர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேற்றை வாரி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

பாஜக நிர்வாகி விஜயராணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அமைச்சர் பொன்முடி சேரை வாரி வீசியதாக  திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அமைச்சர் மீது சேற்றை வாரி அடித்த இருவரையும் இரவு நேரங்களில் போலீசார் தொந்தரவு செய்வதாகவும், அவர்களை கைது செய்ய முயற்சி செய்வதாகவும் அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி அவரது உறவினர்கள் நேற்று  மாலை 5 அளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் கூட்டு சாலையில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே இருவேல்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது, பெண் காவலர்கள் இல்லாமல் அத்துமீறி பெண்கள் மீது கை வைத்து தள்ளும் ஆண் போலீசார் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது.@abpnadu @SRajaJourno #viluppuram pic.twitter.com/RRLq5bHf8F
— Siva Ranjith (@sivaranjithsr) January 14, 2025

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக வந்த போலீசார், பெண்கள் என்றும் பாராமல் நடு ரோட்டில் தர தரவென்று இழுத்துச் சென்றனர். பெண் காவலர் இல்லாமல் சாலை மறியலில் பெண்களை போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அத்துமீறி பெண்கள் மீது கை வைத்ததாகவும் அங்கிருந்த வாலிபர்களை நாயைப் போல நடுரோட்டில் கை கால்களை பிடித்து இழுத்துச் சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இத்தகைய செயல் பல்வேறு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெண் காவலர்கள் இல்லாமல் பெண்கள் மீது போலீசார் கை வைத்து இழுத்து சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இத்தகைய செயலுக்கு பாஜக அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,

அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன் சாத்தனூர் அணை திறப்பால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் அவர் பார்வையிட சென்றபோது, அணை திறப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் தங்களுக்கு இல்லை என்றும், எவ்வித உதவியும் மாநில அரசு, தங்களுக்கு செய்யவில்லை என்றும் கொதிப்பில் இருந்த மக்கள், பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிகழ்விற்கு தொடர்பே இல்லாத விஜயராணி என்பவர் மீது, பாஜகவில் இருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பொய் வழக்கு போடபட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மூச்சைப் பிடித்து வாதம் செய்தது திமுக அரசு.

(அதே நீதிமன்றத்தில் விக்கிரவாண்டியில் பெண்குழந்தை மர்ம மரணத்திற்கு காரணமான செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கேட்டு வந்த வழக்கில் மேம்போக்காக வழக்கை எதிர்கொண்டு அவர்களுக்கு பெயில் வாங்கிகொடுத்ததும் இதே திமுக அரசு தான் ) இந்நிலையில், இன்று இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஏழுமலை என்ற நபரை அழைத்து அடைத்து விசாரிப்பதாக கூறி மிரட்டுகிறது தமிழக காவல்துறை. தெரியாமல் தான் கேக்கிறேன்.

நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா ?! பொன்முடி சட்டையில் கொஞ்சம் சேறு பட்டது தான் நாட்டின் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையா ?! மாநில அரசும் காவல்துறையும் மக்களுக்கானதா ?! இல்லை திமிர் பிடித்த மந்திரிகளுக்கானதா ?!

இதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை விசாரித்து இருந்தால் “யார் அந்த சார் ?” என கண்டுபிடித்து இருக்கலாமே?! இருவேல்பட்டு கிராமத்தோடு முடியவேண்டிய பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக் மாற்ற விரும்புகிறாரா அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் மற்றும்  முதல்வர் ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Entire Article