சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிகவும் வளர்ந்த மாவட்டங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியில் இருப்பதால், தொடர்ந்து ரவுடிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

ரவுடிகள் அட்டகாசம்

சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் சிறு நிறுவனங்கள், வியாபாரிகளை மையமாக வைத்து அவர்களின் மிரட்டி மாமுல் வாங்குவதை இந்த ரவுடிகள் முக்கிய வேலையாக செய்து வருகின்றனர். இதுபோக கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரவுடிகள் மாவட்டமாக மாறும் செங்கல்பட்டு

ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர், ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து, சிறையில் அடைக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் (28). அசோக் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அசோக் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில், பதுங்கி இருந்த அசோக்கை போலீசார் சுட்டு பிடித்தனர்.

பிரபல ரவுடி அசோக்கின் பின்னணி என்ன ?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். அசோக் மீது நாட்டு வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் பகுதியில் இவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதத்தில், வெடித்ததில் அவருடைய ஒரு கண் பார்வை முற்றிலும் செயல் இழந்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாட்டு வெடிகுண்டு செய்வதில், கை தேர்ந்த ரவுடியாக அசோக் இருந்து வருகிறார்.

ஜெர்சிகா பின்னணி என்ன ?

இவரது மனைவி ஜெர்சிகா, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. கணவனுடன் சேர்ந்து கொண்டு நாட்டு வெடிகுண்டு செய்வது, கணவனுக்கு உதவியாக கஞ்சா வியாபாரம் செய்வது என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று ஜெர்சிகாவிடம் போலீசார் விசாரணை, மேற்கொண்டபோது கணவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜெர்சிக்காவிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.