பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

3 days ago 2
ARTICLE AD

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒழிக்க போக்சோ நீதிமன்றங்களை போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிலம்பம், உறியடி நிகழ்ச்சியோடு பெண்களுக்கு வளையல் அணிவித்து மலர் தூவி  நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சௌமியா அன்புமணி பெண்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குறைந்த எண்ணிக்கையில் உள்ள போக்சோ நீதிமன்றங்களை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 7000 வழக்குகளை விசாரிக்க 50 நீதிமன்றங்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 20 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுகின்றன. எனில் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்களுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தர முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியாக மருத்துவர்களை நியமித்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பகுதியில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகள் அமைய உள்ள நிலையில், தொழிற்சாலைகளில் உள்ளூர் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கர்நாடகாவில் தொடங்கி தமிழகத்தில் பாய்ந்து ஓடும் பாலாற்றின் குறுக்கே அதிக அளவில் அணைகளை கட்டி தண்ணீரை சேகரித்து, விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என கூறிய அவர், இதனை மனதில் கொண்டு தான் பாலாறு பாதுகாப்பு இயக்கம் என்ற சிறப்பான திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கல்வி, மருத்துவம் இலவசம்

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வகிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாமல் டாஸ்மாக்கை அதிகப்படுத்துவதில் மட்டும் தமிழக அரசு குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றது. விதவிதமான ஆங்கில பெயர்களுடன் புதிய முறையில் மது விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கு தொடுத்தும், அறிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அதனை தடுத்து நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக முயற்சித்த நிலையில், அதனை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு இடையே போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது, எனவே போதிப்பொருள் நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Read Entire Article