மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மாநில மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

இம்மாநாட்டில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பு‌.தா.அருள்மொழி, ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். பெண்கள் மாநாடு என்பதால் அதிக எண்ணிக்கையிலான பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் இறக்கப்பட்டிருந்தனர். மாலையில் தொடங்க வேண்டிய இம்மாநாடு கனமழை காரணமாக தாமதமானது. இம்மாநாட்டில் 10.5% இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, போதைப் பொருள் கஞ்சா ஒழிப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றியதைத் தொடர்ந்து வன்னியர் சமூக மக்களுக்கான உரிமைகள் குறித்து ராமதாஸ் உரையாற்றினார்.

நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு விதிக்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலை இல்லாமையை நீக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NEET தேர்விற்குச் செல்லும் மாணவிகள் “சோதனை” என்று மன அழுத்தத்தில் ஆக்கப்படுவது தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லை எதிர்வுக்கு, அந்தப் பகுதிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலி மற்றும் நாள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

மகளிர் தொழில் மற்றும் ஆராய்ச்சி கல்விக்கு தனி மகளிர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு உடனடி அமல்படுத்தப்பட வேண்டும்.

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில், மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும்.

மீனவர்களின் கோரிக்கைகள், குறிப்பாக பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தை சார்ந்தவை, நிறைவேற்றப்பட வேண்டும்.

ராமதாஸ் பேச்சின் சாராம்சம்

கங்கை கொண்ட சோழபுரத்தை பற்றி எனக்கு முன்னாள் பேசியவர்கள் கூறியிருந்தார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலையும், ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் கட்டியிருந்தனர். சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி அப்போது அவர் 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது' என்பதற்காக உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் சொல்லியிருந்தார். அருமையான வார்த்தை.

20 சதவீதம் இடஒதுக்கீட்டை தந்தவர் கலைஞர்

என்னுடைய அருமை நண்பர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தார். இதனால் 108 சமூதாயங்கள் பயன்பட்டன. இப்போது முதலமைச்சராக நீங்கள் தந்தையை மிஞ்சிய தனயனாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதை செய்ய ஏன் தயங்குகிறீர்கள்? என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றதும், திங்களை போற்றதும் என்று சொல்லியிருந்தார்கள். இன்னொன்றை அவர்கள் அந்த காலத்தில் சொல்லவில்லை. பெண்களை போற்றதும் என்று சொல்லவில்லை. அதை நாம் இப்போது சொல்லுவோம்." என்று பேசினார்.