பூந்தமல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஐந்து பேர் காயமடைந்தனர். விபத்துக்குன்னான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூந்தமல்லி சக்தி நகரில் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமார் என்பவரின் வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். இரண்டு சிறுவர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்த நிலையில் வீட்டின் ஒரு பகுதி விபத்தில் நெருங்கியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு துறை மீட்புபணிகளை செய்து வருகின்றனர். காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்,

காயமடைந்தவர்களின் பெயர்

குமார் - வயது 52
ஜெகன்- வயது 45
சரஸ்வதி - வயது 64
யுவராஜ் - வயது 10
ஷீலா - வயது 40
ரிஷி - வயது 8
நீலக்குமார் - வயது 58